சிறைச்சாலையில் ஐந்து இலட்சத்துக்கு கையடக்க தொலைப்பேசி

சிறைச்சாலையில் ஐந்து இலட்சத்துக்கு கையடக்க தொலைப்பேசி

ரூ. 5 இலட்சம் பணத்தினை குறித்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கியதன் பின்னர் சிறைக்கைதிகளுக்கு கையடக்கத் தொலைப்பேசியினை சிறைச்சாலைக்குள் எடுத்து வர முடியும் என பொலிஸ் போதைப் பொருள் பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

இலங்கையில் தினமும் ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் கையடக்க தொலைப்பேசியினை உபயோகித்து சிறைச்சாலையினுல் இருந்தி சட்ட விரோதமாக இவ்வியாபரங்களை நடாத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெரோயின் 10 கிராம் கையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவ்வருட ஆரம்பத்தில் வெலிகடை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், பாதால உலகு பிரிவினருடன் தொடர்பில் இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பாகவும் தீவிர கவனத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில சிறைச்சாலை கைதிகள் தமது கையடக்கத் தொலைப்பேசியினை உபயோகித்தி வெளிநாடுகளில் இருப்பவர்களோடும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாரான நிகழ்வுகள் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் ஐவர் வெலிகடை சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post