பொலிஸ் போதைபொருள் பணியகத்தால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் விற்பனை; CID யினறால் விசாரணை முன்னெடுப்பு!

போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் (PNB) இணைக்கப்பட்ட அதிகாரி ஒருவர் மீது குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பில் PNB யின் எந்த அதிகாரிகளும் CID யினரால் இதுவரை தடுத்து வைக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

இதற்கிடையில், தேசிய சிங்கள நாளிதழ் ஒன்று சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், PNB யின் அதிகாரிகள் குழு மீது CID விசாரணையைத் தொடங்கியதாக செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் PNBயின் தடுப்பில் இருந்த 100 மில்லியன் ரூபா பதிப்புள்ள சுமார் 100 கிலோ கிராம் அளவிலான போதைப்பொருளினை துபாய்யில் இருந்து இயங்கும் சட்டவிரோத போதைப்பொருள் வர்தகர்கலுக்கு விற்பனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் ஒரு சோதனையின் போது PNBயின் ஒரு குழுவினரால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் தொகையினை பணியகத்தைச் சேர்ந்த மற்றொரு குழு அதிகாரிகளால் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post