ஜூலை முதல் அலுவலக நேரத்தில் மாற்றம்!

அரச நிறுவனங்களில் ஜூலை மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் நெகிழ்வு போக்குவரத்துத் திட்டமொன்றைஅறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட சேவையை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், ஜூலை மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பொதுப் போக்குவரத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, இவ்வாறான நெகிழ்வு போக்குவத்துத் திட்டத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அரச நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளவும்தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேற்ப டி நடைமுறையை ஜூலை மாதம் 1 ஆம்திகதி முதல் அமலுக்கு கொண்டுவர அமைச்சு தீர்மானித்துள்ளது.
Previous Post Next Post