தற்காப்புக்காகவே மிளகாய் தண்ணீரால் தாக்கினேன் - பிரசன்ன

தற்காப்புக்காகவே மிளகாய் தண்ணீரால் தாக்கினேன் - பிரசன்ன

52 நாள் அரசாங்கத்தின் போது தற்காப்பு கருதியே நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் கலந்த தண்ணீரை வீசி தாக்குதல் நடத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப்பெரும போன்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் கத்திகளை கொண்டு வந்திருந்த நிலைமையிலும் சபாநாயகரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் கையில் கிடைத்ததை கொண்டு தாக்குதல் நடத்த நேரிட்டது. மிளகாய் தூள் கலந்த தண்ணீரை கொண்டு வந்தது யார் என்பது எனக்கு தெரியாது.

அனைத்தையும் ஆதரித்து கைகளை உயர்த்துவதற்காக மக்கள் என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை. 52 நாள் அரசாங்கத்தின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டனர் எனவும் பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post