
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகாரசபைக்கு நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதிஆணைக்குழுவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியளித்தமையால்ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் இந்த அறிவித்தலைவிடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 3 நாட்கள் ஞானசார தேரர் வழங்கிய நீண்ட சாட்சியின் இறுதியில் ஆணைக்குழுவின்தலைவர் இந்த அறிவிப்பை விடுத்ததாக பொது பல சேனா அமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

