தேர்தலை முன்னிட்டு பேஸ்புக்கில் ஏற்படக்கூடிய புதிய மாற்றங்கள்!!!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கபேர்க், 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காரணமாக முகநூல் கொள்கைகள் மற்றும்நடைமுறைகளை மாற்றப்போவதாகக் தெரிவித்துள்ளார்.

நிறவெறி பிரச்சினை மற்றும் கொரோனா பரவல் ஆகியவை இந்த முடிவுக்கு வழிவகுத்ததாக ஸக்கபேர்க் தெரிவித்தார்.

அவர் தனது பேஸ்புக் கணக்கில் ஒரு நேரடி வீடியோவை வெளியிட்டு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.


2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு உடனடியாக பதிலளிப்பதாகவும், கொரோனா பரவல் தொடர்பான பொய்களைத் தடுக்கஉடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஒரு நபர் அல்லது தேசம் உணர்ச்சிரீதியாகவும், உடல் ரீதியாகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் விளம்பரங்கள் தடை செய்யப்படும் என்று அவர் கூறினார்.
Previous Post Next Post