எல்லாவற்றையும் திறந்துவிட்டு மஸ்ஜித்களும், கோவில்களும் திறக்க மட்டும் நல்ல நேரம் பார்க்கும் அரசாங்கம்!

எல்லாவற்றையும் திறந்துவிட்டு மஸ்ஜித்களும், கோவில்களும் திறக்க மட்டும் நல்ல நேரம் பார்க்கும் அரசாங்கம்!

சட்டத்தையும், ஒழுங்கையும் மதித்து, அதனை முறையாகக் கடைபிடித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு, வேண்டுமென்றே அநீதிஇழைப்பவர்களுக்கு இறை தண்டனை நிச்சயமாகக் கிடைக்குமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் ஆளுநருமானஅஷாத் சாலி கூறியுள்ளார்.

நாட்டில் எல்லாவற்றையும் திறந்துவிட்டு, பள்ளிகளையும் கோவில்களையும் மூடிவைத்துக் கொண்டுகாலத்தைக் கடத்துவதன் நோக்கம் தான் என்ன? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.


இது தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும்கூறுகையில், ”சமூக இடைவெளியோ முகக் கவசமோ இல்லாமல் , பொசன் போயா தினத்தில் அதிமுக்கிய பிரபலங்கள்விகாரைகளுக்குச் செல்ல முடியுமென்றால், பாமர மக்கள் தத்தமது வணக்கஸ்தலங்களுக்கு செல்வதற்கு ஏன் தடை போடுகின்றீர்கள்?

பள்ளிவாசல்களை எதிர்வரும் 15 ஆம் திகதிதான் திறக்க முடியுமென அறிவிப்பவர்கள், தொழுகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நல்லநேரமா தேடுகிறார்கள்?

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post