90 வெளிநாட்டு வீரர்கள் லங்கா ப்ரிமியர் லீக் கிரிக்கட் சுற்றில் பங்குகொள்ள இணக்கம்!!

90 வெளிநாட்டு வீரர்கள் லங்கா ப்ரிமியர் லீக் கிரிக்கட் சுற்றில் பங்குகொள்ள இணக்கம்!!

2020 இற்கான லங்கா ப்ரிமியர் லீங் கிரிக்கட் சுற்றுப்போட்டியினை எதிவரும் ஆகஸ்ட் 08 முதல் 20

ஆம் திகதி வரை ஐந்து அணிகளுடன் நடாற்ற இலங்கை அரசாங்கம் விளையாட்டுத்துறை அமைச்சினூடாக இலங்கை கிரிக்கட்வாரியத்திற்கு அனுமதியினை இன்று வழங்கியது.

ஐந்து அணிகளை கொண்ட இச்சுற்றுப்போட்டி இலங்கையில் 03 மைதானங்களில் நடைபெறவுள்ளது.

ஒரு அணிக்கு அதிகபட்சமாக 06 வெளிநாட்டு வீரர்களும், அதிக் நான்கு வீரர்கள் மாத்திரம் ஒரு போட்டியில் கலந்துகொள்ள முடியும்.


சுமார் 90 இற்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் தமது விருப்பத்தினை வழங்கியுள்ளதாகவும், ஜூலை முதலாம் வாரத்திற்குள் அணியின் சொந்தக்காரர்களையும் முடிவுசெய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

13 போட்டிகளை கொண்ட இப்போட்டித் தொடர், ரௌண்ட் ரொபின் முறையுனை தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்நடைபெறவுள்ளது.

முதற்கட்ட போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் தம்புள்ள ரங்கிரி மைதானத்திலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்கண்டி பல்லேகலை மைதானத்திலும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தொடரின் ஏனைய விபரங்கள் ஜூலை இரண்டாம் வாரத்திற்குள் முடிவு செய்யப்படவுள்ளன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post