சீனாவை தனிமைப்படுத்த திட்டம் - உலக அளவில் இணையும் 8 நாடுகள்.. லிஸ்டை பார்த்து ஷாக்கான ஜிங்பிங்!

சீனாவை தனிமைப்படுத்த திட்டம் - உலக அளவில் இணையும் 8 நாடுகள்.. லிஸ்டை பார்த்து ஷாக்கான ஜிங்பிங்!

சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சீனாஉலக நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர இந்த 8 நாடுகள் முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே சீனாவின் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் இருக்கிறது. வைரஸ் குறித்த தகவலைசொல்லாமல் இருந்தது. பொருளாதார சரிவுக்கு காரணமாக இருந்தது.
பொருளாதார சரிவை காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்த நிறுவனங்களை வாங்கியது என்று சீனா மீது பல நாடுகள் கோபத்தில்இருக்கிறது.
முக்கியமாக சீனா மீது அமெரிக்கா கடுமையான கோபத்தில் உள்ளது. சீனாவை முடக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதைஎல்லாம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சீனாஉலக நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர இந்த 8 நாடுகள் முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி, யுகே, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்றாக சேர்ந்து உள்ளது.

சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். அதன்படிமுதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களைவாங்குவது, monopoly என்று சீனாவின் நிறுவனங்கள் தனித்து இயக்குவது ஆகியவற்றை எதிர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அடுத்ததாக சீனாவின் ராணுவம் அண்டை நாடுகளின் எல்லையில் அத்துமீறுவது, தென் சீன கடல் எல்லையில் அத்துமீறுவது ஆகியபணிகளை தடுக்க வேண்டும் என்று இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது . சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீதுஅத்துமீறி வருகிறது. இதை மொத்தமாக தடுக்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஹாங்காங் பிரச்சனையில் சீனாவின் செயலை தடுக்க வேண்டும். ஹாங்காங்கை சீனா மொத்தமாக கட்டுப்படுத்துவதைஅனுமதிக்க முடியாது. சீனா இதை உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகிறது. ஆனால் சீனா ஹாங்காங்கிற்கு கொடுத்த வாக்கை மீறிவிட்டது. இதனால் ஹாங்காங்கில் அமைதியை கொண்டு வரும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சீனா மற்ற நாடுகளுடன் நட்பாக இருப்பதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனா தற்போது ரஷ்யா, தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நட்பாக இருக்கிறது. சீனாவின் இந்த உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்க வேண்டும். உலகஅளவில் சீனாவை தனித்து விட வேண்டும் என்று இந்த 8 நாட்டு அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளனர்.இந்த குழுவில் ஜப்பான், யுகேஆகிய நாடுகள் இருப்பது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post