பீஜிங் இல் 57 பேருக்கு கொரோனா; சீனாவில் இரண்டாவது அலை முழு உலகுக்கும் அச்சம்!!!

சீனாவில் கிருமித்தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

சீனா கிருமித்தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டெழும் நேரத்தில், மீண்டும் அங்கு கிருமித்தொற்று தலைதூக்கியுள்ளது. இன்றுஅங்கு 57 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது சென்ற ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவான ஆக அதிக கிருமித்தொற்று எண்ணிக்கையாகும். இதனால் சீனாவில்கிருமித்தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.


கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கிருமித்தொற்று, கடுமையான முடக்க உத்தரவு, கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவில்கிருமித்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், தெற்கு பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி என்ற இறைச்சி, காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்களிடையேவெள்ளிக்கிழமை மீண்டும் நோய் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்அன்றாட எண்ணிக்கை இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து அச்சந்தை மூடப்பட்டது. மேலும் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படுவது பெய்ஜிங்கில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளையாட்டு நிகழ்ச்சிகள், குழுவாக உணவருந்துவது, மாநிலங்களுக்கிடையிலான சுற்றுப்பயணத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் தொற்றைக் கண்டறியும் அமில பரிசோதனை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அரசாங்கசெய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சீனாவில் இன்று புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்ட 57 பேரில் 36 பேர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள். மேலும் இருவர் முந்தியசம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

மற்றவர்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய சீன நாட்டவர்கள். அவர்களில் 17 பேர் பங்ளாதேஷில் இருந்து வந்தவர்கள். எனவே, அடுத்த நான்கு வாரங்களுக்கு டாக்கா-குவாங்சோ தடத்திற்கான விமான சேவை நிறுத்தப்படும் என்று சீனா கூறியுள்ளது.
Previous Post Next Post