இன்று 20 பேர் பூரண குணம்; மேலும் 19 பேர் தொற்றுக்கு இலக்கு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 821 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.

அதன்படி தற்போது 1,639 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் புதிதாக மேலும் 19 பேர் தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்.

மேலும் இதுவரை நாட்டில் 2,033 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதுடன் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post