தேர்தல் நடைபெறும் நாள் 08ஆம் திகதி தீர்மானிக்கப்படும்! -மஹிந்த தேசப்பிரிய

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல் நடைபெறும் நாள் 08ஆம் திகதி தீர்மானிக்கப்படும்! -மஹிந்த தேசப்பிரிய

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை தீர்மானிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டி அறிவுறுத்தல் குறித்து மாவட்ட உதவி தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றார்.

வரலாற்றில் முதல் முறையாக இம்முறை தேர்தல் நடைபெறும் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுளளனர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் அன்றைய தினம் (08) இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.