இலங்கையில் பிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஹோமாகமையில்! (Video Attached)

இலங்கையில் பிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஹோமாகமையில்! (Video Attached)

Sri lanka cricket
இலங்கையின் மிகப்பெரிய  40,000 இருக்கைகள் மற்றும் பகல் / இரவு கிரிக்கெட் வசதிகளுடன் கொண்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஹோமகமையில் அமைக்க இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (17) அறிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை பார்வையிடச் சென்றனர்.

ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம், கொழும்பு மாவட்டத்தில் பகல் / இரவு ஒளி வசதிகளுடன் கூடிய இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என ஷம்மி சில்வா தெரிவித்தார்.

இம்மைதான திட்டம் 03 ஆண்டுகளுக்குள் முழுமையாக அமைக்க உத்தியேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பண்டுலா குணவர்தன தெரிவித்தார்.

மேலும் ஹோமாகம பகுதியில் உள்ள தியகமவில் இந்த திட்டத்திற்காக 26 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post