வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பசுமார் 40 ஆயிரம் பேர் பதிவு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பசுமார் 40 ஆயிரம் பேர் பதிவு!

உலக நாடுகளில் இருந்து சுமார் 143 நாடுகளில் தங்கியுள்ள 38,983 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்காக தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 3,078 பேர் மாணவர்கள். 4,040 பேர் குறுகிய கால விசா அனுமதியில் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள். 27,854 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்.

3,527 பேர் குடும்பத்துடன் தங்கி வாழ்பவர்கள். 484 பேர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இதனிடையே கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் இதுவரை வெளிநாடுகளில் தங்கியிருந்த 3,600 பேர் 15 நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கல்வி கற்று வந்த மாணவர்கள். ஏனையோர் அரச அதிகாரிகள் மற்றும் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருந்தவர்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post