ஸாகிர் நாயக்கின் Peace TVக்கு பிரித்தானியாவில் சுமார் 7 கோடி அபராதம்!

ஸாகிர் நாயக்கின் Peace TVக்கு பிரித்தானியாவில் சுமார் 7 கோடி அபராதம்!

இந்தியாவைச் சேர்ந்த பிரபல மத போதகரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி ஸாகிர் நாயக்கிற்கு சொந்தமான இரு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு பிரித்தானிய தொலைக்காட்சி ஒழுங்குபடுத்தல் அமைப்பான ஒவ்கொம் (Ofcom) 3 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 6.85 கோடி இலங்கை ரூபா) அபராதம் விதித்துள்ளது.

வெறுப்புணர்வைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய குற்றச்சாட்டிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஸாகிர் நாய்ககின் Peace TV யானது, உருது அலைவரிசைக்கு 2 லட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களும் Peace TV ஆங்கில அலைவரிசைக்கு ஒரு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அலைவரிசைகளும் வெறுப்புப் பேச்சு அடங்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி வன்முறையை தூண்டக்கூடியதாக இருந்தது எனவும் ஒவ்கொம் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post