நாளை முதல் புகையிரத பயண எண்ணிக்கை அதிகரிப்பு!

நாளை முதல் புகையிரத பயண எண்ணிக்கை அதிகரிப்பு!

sl train
நாளை (01) முதல் புகையிரத பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை புகையிரத சேவைகள் வாரியம்  முடிவு செய்துள்ளது.

33 மேலதிக பயண எண்ணிக்கையை நாளை முதல் சேர்க்கப்படவுள்ளதாக புகையிரத வாரியத்தின் துணை பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

இது வேலைக்காக வேண்டி பயணிப்போருக்கு மட்டுமே பிரத்தியேகமாக இச் சேவை அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) நாளை முதல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது அடுத்த வாரத்தில் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக SLTB தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்திருந்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post