கட்டாரில் வபாத்தான இளைஞர் பற்றி பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்! (ஆதாரங்கள் இணைப்பு)

கட்டாரில் வபாத்தான இளைஞர் பற்றி பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்! (ஆதாரங்கள் இணைப்பு)

இலங்கை, அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கள் அன்று கத்தாரில் வபாத்தானார்.

இவருக்கு அடுத்த மாதம் 30 ஆம் திகதி, இலங்கையில் திருமணம் கூட நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர் மாரடைப்பினாலே மரணித்தார் என மிகத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. கட்டார் அரசினால் இவர் மாரடைப்பினாலேயே மரணித்தார் என மரண அத்தாட்சிப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டாரில் செயற்படும் முன்னணி நலன்புரிச் சங்கமான Sri lankan Community Welfare Federation (CWF-QATAR) அமைப்பின் தலைவர் சகோதரர் அக்ரமும், இதை யாழ் நீயூஸ் உடன் உறுதிப்படுத்தினார்.

சகோதரர் அக்ரம் இதுபற்றி மேலும் கூறியதாவது,

"வபாத்தானவர் பற்றி போலியான தகவல் பரப்பப்படுவதாக நாமும் அறிந்தோம். குறித்த மையத்தை நாங்கள் நேரில் சென்று பார்த்தோம். இறுதிவரை அதற்கான பணிகளில் (இறுதிக்கிரிகைகள்) பங்கேற்றோம். வபாத்தானவரின் உறவினரில் ஒருவர்கூட எங்களுக்கு ஒத்தாசையாக இருந்தார்.

வைத்திய அறிக்கை, வேலை செய்த நிறுவனம், அவருடன் இருந்த நண்பர்கள் என சகலரும் முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார், மாரடைப்பினாலே மரணித்தார் என்பதை உறுதி செய்துள்ளனர்.

நிலைமை இப்படியிருக்க, வபாத்தானவர் கேம் (Game) விளையாடி, கண், வாய், மூக்கினால்  இரத்தம் வடிந்து மௌத்தானதாக பொய்யை பரப்பியுள்ளனர்.

இது தவறு. இதுபோன்ற  கதைகள் வபாத்தானவரின் குடும்பத்தை எப்படி வேதனைப்படுத்துமென சிந்தித்துப் பாருங்கள். தயவுசெய்து போலியான, அதாரமற்ற தகவல்களை எந்தவித சமூக ஊடகங்கள் மூலமாக வந்தாலும் நம்பாதீர்கள்!" என்றார்.

ஆவணங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Join our WhatsApp Group:
Group #8

https://chat.whatsapp.com/D7NykyCFsckKItx8HvfphN

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post