நிலையற்ற இவ்வுலகில் எம்முயிர் எப்போது செல்லும் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ரிஸ்லானும் இதற்கு விதி விலக்கல்ல!

நிலையற்ற இவ்வுலகில் எம்முயிர் எப்போது செல்லும் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ரிஸ்லானும் இதற்கு விதி விலக்கல்ல!

கேகாலை கொட்டியகும்பரயில் பிறந்த ரிஸ்லான் இலங்கை தென்கிழக்கு பலகலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் 2011 தொடக்கம் 2015 வரை கல்வி கற்ற பழைய மாணவராவார்.

மிகச்சிறந்த சமூகவாதியாகவும், எல்லோருடனும் நன்றாக பழக கூடியவருமாகவும், எந்த வேலைக்கும் முன்னிற்கும் குணம் கொண்டவரும் பலரின் அபிமானத்தை பெற்ற ரிஸ்லான் யாரிக்கு என்ன பிரசச்சினை என்றாலும் உதவக்கூடிய ஒருவராவார்.

பட்டப் படிப்பின் பின்னர் மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் பௌதீகவியல் ஆசிரியராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட இவர் அவருடைய பணியை மிகச்சிறப்பாக செய்யக்கூடிய ஒரு மிகச்சிறந்த ஆசானாகவும் திகழ்கின்றார்.

புற்று நோய் இந்த உலகத்தை ஆட்பரித்து கொண்டிருக்கும் மிகக் கொடிய நோய். பல்வேறு ஆராய்ச்சிகள் மருத்துவ வளர்ச்சியின் பின் இன்று அதனை குணமாக்க பல வழிமுறைகளும் மருத்துவ சிகிச்சைகளும் கண்டு பிடிக்கப்ட்டு கொண்டுதான் இருக்கின்றன.

எனினும் இநோய்க்கான மருத்துவ செலவுகள் மில்லியன் கணக்கில் செலவிட நம்மை கொண்டு சென்று விடும். அதிலும் குருதிப்புற்று நோய் என்றால் இவற்றிற்கான மருத்துவ செலவுகள். சாதாரண குடும்பத்தினால் ஈடு கொடுக்காத ஒன்றுதான்.

இந்த கொடிய குருதிப்புற்று ரிஸ்லானையும் விட்டு வைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு ரிஸ்லானிற்கு குருதிப்புற்று நோய் (Acute Myeloid Leukemia) இருக்கின்றது என அறியப்பட்டது. இந்த செய்தி ரிஸ்லானை நேசிக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இச்செய்தி கஷ்டம்தான்.

இருபத்தொன்பது வயதான ரிஸ்லான் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் தற்போது மகரகமை புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சாதாரண நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவரான இதில் இருந்து பூரண குணமடைய வேண்டுமெனின் என்பு மச்சை மாற்று சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும் இந்தியாவிற்கு சென்று இதனை செய்து முடிக்க சுமார் 70 லட்சம் பணம் தேவை என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

இதனை முழுமையாக திரட்ட முடியாத ரிஸ்லான் தற்போது உங்களின் உதவியை நாடுகின்றார், எம் உடன் பிறவா சகோதரன் ரிஸ்லானிற்கு உங்காளால் முடிந்த பண உதவியை வழங்குமாறு வேண்டி நிற்கிறோம்!

உங்கள் சகோதரன் இதில் பூரண குணமடைய இறைனை பிராத்தியுங்கள். இறைவன் எப்போதும் உங்களுக்கு அருள்பாலிக்கட்டும்!

தகவல்: ஸியாத் (30-05-2020)


மேலதிக தகவல்களுக்கு:

1. ரிஸ்லான் – 0773690389
2. ரிப்ரி ( தந்தை ) – 0762314704 / 0778945457

--Bank Details--

M. R. M. Rizlan
A/C - 355200110005378
People's Bank
Kotiyakumbura.

M. R. M. Rizlan
A/C- 82855082
Bank of Ceylon
Kotiyakumbura.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post