இலங்கையில் விரைவில் திறக்கபடவிறுக்கும் (Gym) உடற்பயிற்சி நிலையங்கள்! -சுகாதார அமைச்சர்

இலங்கையில் விரைவில் திறக்கபடவிறுக்கும் (Gym) உடற்பயிற்சி நிலையங்கள்! -சுகாதார அமைச்சர்

நாடு பூராகவும் ஐந்தாயிரம் உடற்பயிற்சி நிலையங்களை மிக விரைவில் திறக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய தகுதிவாய்ந்த உடற்தகுதி ஆலோசகர்கள் கவுன்சிலுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் நேற்று (19) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. 

ஆலோசனைக் குழுவின் தலைவர் சுதத் கோட்டாபய உடற்பயிற்சி நிலையங்களை  மீண்டும் திறப்பதற்கான திட்டத்தை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைத்திருந்தார்.

உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டதால் சுமார் இருபதாயிரம் தொழில்முறை வீர வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அதில் உடற்பயிற்சி நிலையங்களில் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய பல சுகாதார ஆலோசனைகள் உள்ளடக்கப்பட்டிறுந்தன.

இந்த திட்டம் தொடர்பாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைகள் தயாரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பான மற்றொரு விவாதம் அடுத்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post