பயிற்சிகளை ஆரம்பிக்க தயாராகும் இலங்கை கிரிக்கெட் அணி!

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அனுமதிக்கும் பட்சத்திலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களுடன் சிறிய குழுவை கொண்டு பயிற்சியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள மிக்கி ஆர்தர,

”கடந்த வாரம் விரைவான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம். அப்போது மீண்டும் பயிற்சியை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கிரிக்கெட் சபை அதிகாரிகள் சாதகமான பதில்களை பெற்ற பின்னர், அணித் தலைவர் மற்றும் என்னுடைய ஒத்துழைப்புடன் கூடிய ஆலோசனைகளுடன் பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன். எதிர்வரும் யூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பயிற்சிகளை ஆரம்பிக்க வீரர்கள் தயாராகவுள்ளனர்." என அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post