போலி வீடியோ தொடர்பில் CCD இராஜ் இடம் விசாரணை!

போலி வீடியோ தொடர்பில் CCD இராஜ் இடம் விசாரணை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அவர்களுடைய என்று இணையதளங்களில் பரப்பப்பட்டு வந்த போலியானவீடியோ தொடர்பில் விசாரணைகளுக்காக இராஜ் வீரரத்ன நேற்று (13) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CCD) அழைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் சய்பர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு காவிந்த ஜயவர்தன அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட புகாரினை தொடர்ந்தே இராஜ்வீரரத்ன விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோவில் இருப்பவர் தான் இல்லை என்று ஒப்புவிப்பதற்காக காவிந்த ஜயவர்தன அவர்க்ள் மூலம் நீத்மன்றத்திற்கு வைத்தியசாட்சி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வீடியோ போலியாக வடிவமைக்கப்பட்டு இணையத்தலத்தில் வெளியிட்ட நபர் யார் என்றதொடர்பில் சைபர் குற்றப்பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம்விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மல்ஷா குமாரதுங்க அவர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சமூக வலைதள பிரசாரங்களில் பிரதானமாக ஈடுபட்டஇராஜ் வீரரத்னவுக்கு ஶ்ரீலங்க பொதுஜன பெரமுன அரசின் மூலம் சுற்றுலா துறையில் பிரதான பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post