விடுமுறையில் வந்துள்ள இலங்கையர்கள் மீண்டும் கொரியா செல்ல விசேட விமானம்!

தென்கொரியாவில் பணியாற்றிவந்த நிலையில் விடுமுறையில் இலங்கை வந்திருந்த பணியாளர்களை மீண்டும் தென்கொரியாவுக்கு அனுப்புவதற்காக விசேட விமானமொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் எதிர்வரும் 26ஆம் திகதி மத்தல விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள பணியாளர்கள் புறப்படுவதற்கு முன்னதாக கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post