இலங்கையில் சுகாதார விதிமுறைகளை மீறிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் சுகாதார விதிமுறைகளை மீறிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

கோவிட் -19  சுகாதார ஆலோனையை மீறி  உணவு பரிமாறிய ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஹட்டன் பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட்- 19 தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் சுகாதார பிரிவினரின்   நிபந்தனைகள்  அடிப்படையில் ஹோட்டல்களை திறக்க அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில், ஹோட்டல்களில் உணவு பரிமாற முடியாதென்றும் பொதி செய்து விற்பனை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து இன்று (15) ஹட்டன் பொலிஸாரும், சுகாதார பிரிவினரும், ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களுக்கு  சென்று பார்வையிட்டனர்.

இதன் போது சில ஹோட்டல் உரிமையாளர்கள் நிபந்தனையை மீறி ஹோட்டல்களின் மேல் மாடியில் உணவு பரிமாறியதை அவதானித்ததைடுத்து  அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் தொடர்ந்து இவ்வாறு செயற்பட்டால் கோவிட்- 19 சுகாதார நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் எச்சரித்தனர்.

-Adaderana

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post