தவறான வழியில் பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் வீசிய தாய்!

தவறான வழியில் பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் வீசிய தாய்!

File Picture
தவறான வழியில் பிறந்த பச்சிளம்பாலகனை வீட்டு மலசலகூடக் குழிக்குள் தூக்கிவீசிய தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. என்ன செய்வதென்று அறியாது சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.

நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரைக் கைது செய்தனர்.

சந்தேக நபரான பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post