வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களே ஏமாறாதீர்கள்! ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத்தலைப்பில் போலி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களே ஏமாறாதீர்கள்! ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத்தலைப்பில் போலி அறிவிப்பு!

PMD Sri lanka
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத்தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள போலி அறிவிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உலகில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள நிதி சிக்கல்களை நிவர்த்திக்கும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்து குறித்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

அத்துடன் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வங்கிக் கணக்கிலங்களும் கோரப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பு போலியானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இவ்வாறான போலித் தகவல்களின் பின்னணியில் அரசியல் குழுவொன்றே இயங்கி வருவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த போலி அறிவிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.