இலங்கை நாடாளுமன்றம் இனிகூடாது! திட்டவட்டமாக அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்றம் இனிகூடாது! திட்டவட்டமாக அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்றம் இனிகூடாது! திட்டவட்டமாக அறிவிப்பு!
கலைக்கப்பட்டிருக்கும் இலங்கை நாடாளுமன்றம் இனி கூட்டப்படாது என்பதை ஆளும் பொதுஜன முன்னணி இன்று (11) அறிவித்திருக்கிறது.

கொழும்பில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தவிசாளர்களில் ஒருவராகிய பேராசிரியரும், சட்ட மேதையுமான ஜி.எல்.பீரிஸ் மேற்படி கூறினார்.

"மக்களினால் கடந்த காலங்களில் இந்த நாடாளுமன்றம் வெறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அரசமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கமைய வரையரைக்குள் ஜனாதிபதி இப்பாராளுமன்றைக் கலைத்தார். அதனை சவாலுக்கு உட்படுத்த எவராலும் முடியாது. இருப்பினும் எதிர்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நலன்களுக்காகக் கூச்சலிட்டு வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post