கடந்த வாரம் போலவே எதிர்வரும் வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணி தொடரும்!

கடந்த வாரம் போலவே எதிர்வரும் வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணி தொடரும்!

இலங்கையில் கடந்த வாரம் போலவே எதிர்வரும் வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் (18) முதல் பணிக்காக செல்வதற்கு கோரிக்கைகள் அதிகரித்துள்ளமையினால் அலுவலக ரயில்கள் 19 வரை அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான சூழலில் ரயில் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 11500 வரை அதிகரித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் காரணமாக சேவை வழங்குவதனை நிறுத்தியிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், சில கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியினுள் சேவை பெற்றுக் கொள்வதற்காக தொலைபேசியில் அழைத்து நேரம் ஒன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (17) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post