புதையலுக்கு தோண்டிய குழியில் விழுந்த இரு சிறுமிகள் பலி!

புதையலுக்கு தோண்டிய குழியில் விழுந்த இரு சிறுமிகள் பலி!

பக்கமுன, அத்தரகல்லேவ பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். 

3 மற்றும் 7 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

வீட்டின் பின்புறத்தில் தோண்டப்பட்டிருந்த குழியல் நீர் நிரம்பி காணப்பட்ட நிலையில் குறித்த இரு சிறுமிகளும் அதில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர். 

சடலங்கள் பக்கமுன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (18) பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. 

சம்பவம் தொடர்பில் பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post