ஜனாதிபதி தலைமையிலான இறுதிப்போர் வெற்றி நிகழ்வு இன்று!

ஜனாதிபதி தலைமையிலான இறுதிப்போர் வெற்றி நிகழ்வு இன்று!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் 11ஆவது போர் வெற்றிதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (19) பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இன்றைய போர் வெற்றி தினத்தில் இராணுவத்தின் 14,617 பேருக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில் இலங்கை பாதுகாப்பு படைகளின் போர் வெற்றி தின நிகழ்வுகள் இன்று தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுவுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பிரதமர், இராணுவத்தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வானது இன்று பிற்பகல் 4 மணிக்கு தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறும்.

வழமையாக இராணுவ அணிவகுப்புகள், போர் நினைவு நிகழ்வுகள் என விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் கூட, கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சமூக ஒன்றுகூடல் குறித்த அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் ஆடம்பரமில்லாது அமைதியான முறையில்  போர் வெற்றி தினம் கொண்டாடப்படும் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்விலேயே இந்த பதவி உயர் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் இராணுவ  வரலாற்றில் இடம்பெற்றுள்ள  பதவி உயர்வு  நிகழ்வுகளில் ஒரு நாளில் அதிக இராணுவ வீரர்களுக்கு வழங்கும் பதவி உயர்வு இதுவாகும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இராணுவ வீரர்களுக்கு வழங்கும் கௌரவமாக இந்த பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. 

-virakesari 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post