ஊரடங்கை மீறி தொண்டமானின் உடலிற்கு அஞ்சலி! -புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து அச்சம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கை மீறி தொண்டமானின் உடலிற்கு அஞ்சலி! -புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து அச்சம்!

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் உடலிற்கு சமூகவிலக்கல் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை மீறி ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என afp.com செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து AFP மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்க அமைச்சரும் தொழிற்சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமானிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை காலமான அமைச்சரின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம்செய்யப்படவுள்ளது. தொண்டமானின் உடலை பார்வையிடுவதற்காக பெருமளவு மக்கள் திரள்வதை தடுப்பதற்கா அதிகாரிகள் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்துள்ளனர்.

அமைச்சரின் உடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்வேளையும் பெருமளவானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி சடங்குகள் காரணமாக வைரசினை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மக்களின் நம்பிக்கைகள் பாதிக்கப்படலாம் என அறிக்கையொன்றில் மருத்துவர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக இரண்டாம் சுற்று வைரஸ்பரவல் உருவாகலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.இறுதிசடங்குகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், இறுதிசடங்குகளை குடும்பஉறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தியுள்ள நிலையில் தொண்டமானின் உடலிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறித்து மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மக்களை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது,கலக்கமடைந்துள்ள ஆதரவாளாகள் பொலிஸாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்து அஞ்சலி செலுத்த முயல்கின்றனர் என காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

-Rajeevan Arasaratnam

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.