இந்த ரமழானின் பெருநாள் தினம் தொடர்பான அகில இலங்கை ஜாமிஅத்துல் உலமாவின் வழிகாட்டல்!

கொவிட் 19 வைரஸின் பரவலுக்கு மத்தியில் இம்முறை நாம் எமது ரமழான் நோன்புகளை நோற்று வந்து, தற்போது ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து அனைவரும் அவசரமாக இயல்பு வாழ்விற்கு திரும்ப இப்புனித ரமழான் மாதத்தில் பிரார்த்திக்கும் அதேநேரம் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

மேலும் எதிர்வரும் நோன்புப்பெருநாள் அன்று இலங்கை மக்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள்:


  • இம்முறை நெருக்கடியானதொரு சூழலில் நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம் என்ற உணர்வுடன் நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி பெருநாள் தினத்தில் நடந்துக் கொள்ள வேண்டும்.


  • பெருநாள் தொழுகையை பள்ளிவாசலிலோ, திடல்களிலோ கூட்டாக தொழுவதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும். மாறாக எமது வீடுகளிற்குள்ளேயே எமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து பெருநாள் தொழுகையை தொழுது கொள்ள வேண்டும்.
  •  இம்முறை பெருநாளை வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளல். அத்துடன் வீண் பிரயாணங்களையும் ஒன்று கூடல்களையும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.


  • பெருநாள் தினத்திலும் ஏனைய தினங்களிலும் மற்றவர்களுடன் முஸாபஹா, முஆனகா செய்வதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.


  • ஷவ்வால் மாதப் பிறை தென்பட்டதிலிருந்து பெருநாள் தொழுகை வரை அதானுக்குப் பின்னர் மஸ்ஜித்களில் தக்பீரை ஒலிபெருக்கியில் சொல்வதற்காக ஒருவரை நியமித்து ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.


  • பெருநாள் தினங்களில் ஏழை எளியவர்கள் விடயத்திலும் கரிசணை காட்டி தம்மாலான உதவிகளை செய்து கொள்ள வேண்டும்.அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Previous Post Next Post