துறைமுக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

துறைமுக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

வெலிகம - மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு அருகே இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தநபரொருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிரிஸ்ஸ மீன்படி துறைமுகத்திற்கு அருகில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு முன்னால் குறித்த நபர் நின்றுக்கொண்டிருந்த போது , உந்துருளியில் வந்த இரண்டு நபர்களால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் அருகிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்துள்ளதோடு, அவரைப் பின்தொடர்ந்த சந்தேகநபர்கள் மீண்டும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, துப்பாக்கி பிரயோகத்தைமேற்கொண்டதன் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிக்க முயன்ற வேளையில் பிரதேச மக்கள் சந்தேக நபரொருவரை மடக்கிப் பிடித்துகாவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post