ரூ. 5000 கொடுப்பனவு இனி சமூர்தி வங்கிக் கணக்கில் இடப்படும்!!!

ரூ. 5000 கொடுப்பனவு இனி சமூர்தி வங்கிக் கணக்கில் இடப்படும்!!!

கொரோனா பரவல் காரணமாக பாதிக்மப்பட்ட மக்களுக்கு ரூ. 5000 கொடுப்பனவு சமூர்தி வங்கி மூலமாக மக்களுக்கு வழங்க தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளது.

பலரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கொடுப்பனவினை வழங்கும் போது ஏற்படும் பிரச்சினைகளைகவனத்திற்கொண்டே சமூர்தி அபிவிருத்தி திணைக்களம் இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் ரூ. 5000 கொடுப்பனவினை பெறும் ஒவ்வொருவரும் சமூர்தி வங்கியில் கணக்கொன்றை ஆரம்பிக்கவேண்டும் என திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பந்துல திலகசிரி தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post