பல்கலைகழக அனுமதியினை உறுதிப்படுத்திக்கொள்ள மாணவர்களுக்கு 3 நாட்கள்!

பல்கலைகழக அனுமதியினை உறுதிப்படுத்திக்கொள்ள மாணவர்களுக்கு 3 நாட்கள்!

கொரோனா வைரஸ் பரவலினை தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டதன் விளைவாக பாடசாலைகள் மூலம் உயர்தர பரீட்சைக்குதோற்றி, பல்கலைகழகம் தெரிவான மாணவர்களுக்கான அனுமதியினை உறுதி செய்வதற்காக வரும் மே மாதம் 20 புதன், 21 வியாழன்மற்றும் 22 வெள்ளி ஆகிய மூன்று நாட்களுக்குள் செய்து கொடுக்குமாறு கல்வித் திணைக்கள பாடசாலை அதிபர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பேணி அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள்தமது பாடசாலையில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, பல்கலைகழகம் தெரிவான மாணவர்களுக்கான அனுமதியினை உறுதி செய்துகொடுக்குமாறு கல்வித் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post