26 வயதான ஜீவன் தொண்டமான் தனது மறைந்த தந்தைக்கு பதிலாக தேர்தல் களத்தில்!

26 வயதான ஜீவன் தொண்டமான் தனது மறைந்த தந்தைக்கு பதிலாக தேர்தல் களத்தில்!

Arumugam Thondaman
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று (26) திடீரென காலமானதையடுத்து வேட்பாளர் சீட்டு காலியாகிவிட்ட நிலையில், அவரது மகனான 26 வயதான ஜீவன் தோண்டமானை வேட்பாளராக நியமிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

SLPP யின் கீழ் நுவரஎலிய மாவட்ட தேர்தலில் போட்டியிட ஆறுமுகன் தொண்டமன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜீவன் தோண்டமான் திரு. ஆறுமுகன் தொண்டமானின் மகன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் பிரிவு தலைவராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ஜீவன் தோண்டமானின் பெயர் விரைவில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post