பெருநாளுக்காக ஒன்று கூட வேண்டாம்! 21 முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெருநாளுக்காக ஒன்று கூட வேண்டாம்! 21 முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!

எதிர்வரும் ஈத் அல்-பித்ர் நோன்புப் பெருநாளுக்காக பொதுமக்கள்  ஒன்று கூடுவதை தவிர்த்து, வீடுகளிலேயே பாதுகாப்பாக கொண்டாடுமாறு 21 முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன்சில், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் YMMA உள்ளிட்ட 21 அமைப்புகள் இணைந்து நேற்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 அதில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,

தற்போதைய நிலையில் முழு நாடும் கொரோனா (கோவிட் 19) வைரஸுக்கெதிராக போராடிக்கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததே.

பொதுமக்கள் ஒன்றுகூடலைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பேணி வீட்டில் இருக்கும்படி அரசும் சுகாதாரப் பிரிவும் கண்டிப்பாக அறிவு றுத்தியுள்ளன. இதற்கு மேலதிகமாக அரசு ஊரடங்குச் சட்டத்தையும் பிரதே சங்களை முடக்குவதையும் அமுல்பபடுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக மக் களின் அன்றாட வாழ்க்கை பாதிக் கப்பட்டுள்ளதும் நீங்கள் அறிந்ததே.

பொதுமக்கள் இந்த வைரஸின் பரவலைத்தடுப்பதற்காக அவர்களது அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றி உதவி வருகின்றனர்.

ரமழான் என்பது ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுடன் சேர்ந்து ஈத் அல்-பித்ர் பெருநாளுடன் நிறைவு பெறும் மாதமாகும்.

அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாம் ஒன்று கூடலைத் தவிர்த்துள்ளோம்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்திலும் பெருநாளை நாம் ஒன்றுகூடி கொண்டாட முடியாதென்பதனை விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே கூறியது போல் ஒன்றுகூடலைத்தவிர்த்து சமூக இடைவெளியைப்பேணி வீட்டில் இருந்து இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் இன்னும் பரவி வருகிறது என்பதை விளங்கி எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, அனைவரையும் பாதுகாக்க பொறுப்புடன் நடந்து கொள்வது எமது கடமையாகும். சமூக நலனைக் கருத்திற் கொண்டு எமது வழமையான பெருநாள் கொண்டாட்டங்களிலிருந்து சிலவற்றை தவிர்ந்துக் கொள்ளுதல் சாலச்சிறந்ததாகும்.

கீழே சில பணிவான வேண்டு கோள்களை முன்வைக்கிறோம்.

மக்கள் ஒன்றுகூடி பொது இடங்களில் ஈத் அல்-பித்ர் எனும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதனை தவிர்க்கவும்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஈத் பெருநாள் பொருட்கள் (உடைகள்) கொள்வனவுக்காக கூட்டம் கூட்டமாக கடைகளில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து ஆன்லைன் (Online) கொள்வனவு, வீட்டு விநியோகம் என்பவைகளை நாடுவதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

குறிப்பாக இந்த புனித ரமழான் மாதத்தில் பெருநாள் செலவுக்கான பணத்தை ஏழை எளிய மக்களுக்கும் கொடுத்துதவுவது மிகவும் விரும்பத்தக்கதாகும்.

உங்கள் வீட்டிலிருந்தபடி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் விருப்பத்துக்குரியவர்களுடனும் பாதுகாப்பாக ஈத் பெருநாள் கொண்டாடவும்.

பொறுப்புள்ள பிரஜையாக வீட்டிலிருந்து பாதுகாப்பாக ரமழானின் படிப்பினைகளைப் பெற்று இப்பெருநாளைக் கொண்டாடுங்கள்.

மேலும் இந்த தொற்று நோயிலிருந்து உலக மக்களையும் எமது நாட்டு மக்களையும் பாதுகாத்து நாம் என்றும் ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

-Vidivelli

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.