எதிர்வரும் ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை தடுக்குமாறு கோரி 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை தடுக்குமாறு கோரி 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்!

பொதுத் தேர்தல் நடத்துவதை ஒத்திவைத்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முதலில் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகனான, சட்டத்தரணி சரித குணரத்ன மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அது தவிர, ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ரீ.எம். பிரேமவர்தன, பேரசிரியர் அன்டன் மீமண, ஏ.எம். ஜிப்ரி, எஸ். சிவகுருநாதன், மஹிந்த ஹத்தக்க, எச்.டி.எஸ்.எப்.டி. ஹேரத், எம்.எஸ். ஜயகொடி ஆகிய 08 பேர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியயின் செயலாளர் நாகயம் முன்னாள் எம்.பி. ரஞ்சித் மத்துமபண்டாரவினாலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பினர்கள், ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. ஜயசுந்தர, சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க, சட்ட மாஅதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை தடுக்குமாறு கோரி  இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

மார்ச் 02 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 இல் தேர்தல் நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கொவிட் 19 தொற்றுடன் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மார்ச் 21 இல் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டது.

ஆயினும் தற்போது ஜூன் 20 இல் தேர்தல் நடத்தப்படுமென வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 03 மாதத்தினுள் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதனைவிடுத்து ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவது சட்டவிரேதமானதெனவும் மனுக்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய் தொற்று பரவியுள்ள நிலையில் தேர்தல் நடத்துவது வாக்காளர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும். எனவே தேர்தல் நடத்துவதை தடுப்பது தொடர்பான உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளதோடு, தேர்தல் நடத்தும் வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (11) இடம்பெறும் நிலையில் இந்த மனுக்கள் அன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன.

-Jaffna Muslim

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.