இன்றைய நாள் (17) முடிவில் இலங்கையின் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 11 ஆல் அதிகரித்து, தற்போதைய மொத்த எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் சுகமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ள அதே சந்தர்ப்பத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 434 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.