கொரோனா வைரஸை அழிக்க இத்தாலி சென்ற கியூபா நாட்டு மருத்துவர்களின் அறிவுரைகள்! நாமும் பின்பற்றுவோம்..

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைரஸை அழிக்க இத்தாலி சென்ற கியூபா நாட்டு மருத்துவர்களின் அறிவுரைகள்! நாமும் பின்பற்றுவோம்..

இத்தாலிக்கு சென்ற கியூபா மருத்துவர்களின் இறந்த நோயாளிகளை அவர்கள் பரிசோதனை செய்ததில் இருந்து கிடைத்த தகவல்கள் இவை.

நாமும் அலட்சியம் செய்யாமல் முடிந்தவரை கொரோனா வைரசை அழிப்பதில் ஒத்துளைப்போம்

கீழ் உள்ள தகவல் வைத்தியர்களின் ஆய்வின் அடிப்படையில் பெறப்பட்டவை முடிந்தவரை நாம்மையும் காத்து மற்றவரையும் காக்க முயற்சிப்போம்

இந்த கொரோனா வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.

மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப்பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு பல நாட்கள் தேவை. அதற்குள் நோயாளி இறந்து விடுகிறார்.

கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக கியூபா மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு,

1. சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள். தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் மிடறு வெந்நீரை உள்கொள்வது, வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக் கால்வாய் வழியாக கழுவி வயிற்றை அடைந்து ஜீரண தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)

2. இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும், உப்பு அல்லது எலுமிச்சம் சாறு அல்லது ‘வினிகர்’ தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle).

3. Covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளது. எந்த சவர்க்காரமும்(சோப்) அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக் கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்திலும் தொடாமலும், இருக்காமலும்,(உட்காராமல்) நேரடியாக குளியல் செய்யுங்கள். அல்லது உடலின் அனைத்து பாகங்களையும் சோப்பு போட்டு கழுவிடுங்கள்.

4. நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக் கூடியது.

5. உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (Metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள். ஏனெனில், உலோக தொடுபரப்புக்களில் பல நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.

6. கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கான முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

7. புகை பிடிப்பதை தவிருங்கள்.

8. உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்காரத்தினால்(சோப்) 20 நொடி கழுவுங்கள்.

9. மரக்கறி(காய்கறி) மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள்.

10. விட்டமின் C மாத்திரமின்றி, உங்களுக்கு நாகத் தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய உணவுகளை தேடி உண்ணுங்கள்.

11. இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்ப்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.

12. எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கான அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறிய நடைமுறைகளின் மூலம் தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

13. covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய முறைகள் மூலம் எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

14. மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

உங்கள் உடல் நலனில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ளுங்கள்..!

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.