கொரோனா வைரஸ் தொற்று வேகம் அதிகரிப்பு! அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைரஸ் தொற்று வேகம் அதிகரிப்பு! அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று (14) அறிவித்துள்ளார்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான்ன் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது.

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

''நான் அதிகாரபூர்வமாக தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்கிறேன். இந்த நடவடிக்கையின் 50 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த 8 வாரங்கள் வைரசை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்களாகும்’’ என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.