இன்று முதல் பொதுப்போக்குவரத்துக்களில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் பொதுப்போக்குவரத்துக்களில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை!

பொதுப்போக்குவரத்துக்களில் கிருமிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இன்று (14) முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டில் படையினர் தமது ஒத்துழைப்பை வழங்குவர். இந்தநிலையில் பொதுமக்கள் ஒன்று கூடுதல் மற்றும் நிகழ்வுகளை முடியுமானளவு தவிர்ப்பது என்ற முடிவும் நேற்று எடுக்கப்பட்டது.

சீனாவில் தற்போது கொரோனவைரஸ் தொற்று சமூக பழக்கவழக்களின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே அதிகாரிகள் சீனாவின் இந்த ஏற்பாடுகளை அறிந்துக்கொள்வது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.