கம்பளை ரவ்ளதுல் அத்fபால் குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த பட்டமளிப்பு விழா! (படங்கள் இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளை ரவ்ளதுல் அத்fபால் குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த பட்டமளிப்பு விழா! (படங்கள் இணைப்பு)

Rawlathul Athfal Quran Madrasa - Gampola
கண்டி , கம்பளை ரவ்ளதுல் அத்பால் குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த பட்டமளிப்பு விழா மற்றும் கலைவிழா நிகழ்ச்சி கம்பளை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷேஹ் எம். எஸ். ரியாஸ் மொஹம்மட் (நளீமி) அவர்களின் தலைமையில்  கம்பளை அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் வெகு விமர்சையாக இன்று (16) நடைபெற்றது.

இங்கு கல்வி பயிலும் சிறார்களின் கஸீதா, நாடகம், நடனம், பாடல் நிகழ்ச்சிகள், ஹதீஸ் மனனம், இஸ்லாமிய கீதம் ஆகிய பலநிகழ்வுகள் காணக்கூடியதாக இருந்தது.

இன்று நடைபெற்ற இவ்விழா கம்பளை ரவ்ளதுல் அத்பால் குர் ஆன் மத்ரசாவின் நான்காவது பட்டமளிப்பு மற்றும் கலைவிழா என்பதும்குறிப்பிடத்தக்கது.

பிரதம அதிதியாக முன்னாள் கம்பளை கல்வி பணிமனையின்  உதவி கல்வி பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ. ஜே. எம். இல்யாஸ் (SLEAS) அவர்களும் கௌரவ அதிதிகளாக திஹாரிய பாத்திஹ் உயர் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச். எல். எம். ஹாரிஸ் அவர்களும், கம்பளை பாfம் டெக் உரிமையாளர் மற்றும் ரவ்ளதுல் அத்பால் குர் ஆன் மத்ர்சாவின் ஆலோசகருமான அல்ஹாஜ் எம். என். எம். அஸ்லம் அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து இவ்விழாவினை சிறப்பித்தனர்.

ஐந்து வருட பாடத்திட்டத்தினை கொண்ட இந்த குர்ஆன் மத்ரசாவின் பாடத்திட்டமானது இலங்கையில் பல மத்ரசாக்களின் பாடத்திட்டமாக இருப்பதும்   குறிப்பிடத்தக்கது.

அன்றாட வாழ்வினை மேம்படுத்துக்கூடியதும் இனங்களுக்கிடையில் நல்லிணத்திற்கினை வளர்க்கக்கூடியதுமான இவ்வாறான குர்ஆன்மத்ரசாக்கள் மேலும் உருவாக்கப்பட வேண்டும் என விசேட அதிதியாக கலந்து கொண்ட முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மத்திய மாகணத்திற்கு பொறுப்பான அதிகாரி திரு. ஸியாத் அஹ்மத் தெரிவித்தார்.





























Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.