இம்முறை சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

எதிர்வரும் குளிர்கால பருவத்தில் சுற்றுலாவிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

usatoday.com என்ற பிரபல இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்ட முதல் 20 நாடுகளில் இலங்கை முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் தளங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் இயற்கை அமைவிடங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈக்கும் விடயங்களாக உள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குளிர்கால பருவத்தில் டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையான காலங்களில் இலங்கை போன்ற நாடுகள் உடலுக்கு ஏற்ற சமநிலையை ஏற்படுத்தும் காலநிலையைக் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், இலங்கைக்கு அடுத்து Galápagos Islands என்ற தீவும் டுபாய், வியட்நாம், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.