
கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த இந்த வேலைத்திட்டத்தில் ஒரு மாதத்திற்கு மாத்திரம் இலவச வீசா சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது.
இலவச வீசா சலுகையின் மூலம், ஒரு மாத சுற்றுலா காலத்தின் பின்னர் சுற்றுலா பயணிகள் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள நிர்வாகி பசன் ரட்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இலவச வீசா நடைமுறை அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

