
இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று இந்தியாவில் நாடு முழுவதும் 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றினார். அப்போது ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசினார்.
ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நானை கருப்பு நாளாக அனுசரித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது படத்திற்குப் பதிலாக கருப்பு கலரை பிரோபைல் போட்டோவாக பதிவேற்றம் செய்துள்ளார்.

