ரஷ்ய விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஷ்ய விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது!

ரஷ்ய விஞ்ஞானியினால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இந்த புதிய தொழிநுட்ப உபகரணம் கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ்வின் (Dr.Evgeny Usachev) தயாரிப்பாகும்.

கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ் இவ்வுபகரணத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், ரஷ்ய விஞ்ஞானி ஓல்கோ உசச்சேவா (Olgo Usacheva), இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி.மெட்டேரி (Yury B.Materiy), ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் சேனக அபேகுணவர்த்தன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தவுலாகல உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.