
இதையடுத்து, தவறான தகவல்களை, வதந்திகளைப் பரப்பி விரும்பத்தகாத விளைவுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசி, இணையதள சேவை, அனைத்து செல்போன் நிறுவனங்களின் சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் மந்திரி ஃபாவத் ஹூசைன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் வான் எல்லையைத் தொடர்ந்து, இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது என பதிவிட்டுள்ளார்.