
இதன்படி, தேசிய ரீதியில் 2,678 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்கு இம்முறை தோற்றுகின்றனர். பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சை இடம்பெறவுள்ளது.
பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடத்தில் விதி முறைகளை மீறிய 229 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.