புலமைப்பரிசில் பெறுபேறு ஒக்டோபர் ஐந்தாம் திகதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் பெறுபேறு ஒக்டோபர் ஐந்தாம் திகதி!!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள், 15ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில், இப்பரீட்சையின் பெறுபேறுகளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதியளவில் வெளியிட முடியும் என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகத் தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த, இம்முறை 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.