
நாடாளுமன்றத்தில் இன்று (07) பெட்டிகளோ கெம்பஸ் நிறுவனம் குறித்து ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
ஹிஸ்புல்லாஹ் உருவாக்கிய நிறுவனம் சட்டவிரோதமானது என்ற கருத்தை மட்டுமே கூறி வருகின்றனர். இதில் இவர் அமைச்சராக இருந்த காலத்தில் தனியார் நிறுவனத்தை கையாண்டார் என்ற குற்றச்சாட்டை மட்டும் கூறுகின்றனர். ஆனால் இவர் தெரிந்தே இந்த ஊழலை செய்துள்ளார்.
மேலும் இந்தியா பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் ஹிஸ்புல்லாஹ்வின் இந்த நிறுவனம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் இங்கிருந்து உருவாக்கப்பட்ட தற்கொலைதாரிகளின் மூலமாக இடம்பெற்றுள்ளது.
ஸஹ்ரான் இங்குதான் இவர்களின் பாதுகாப்பில் பிரசாரம் செய்துள்ளார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்துவதற்கு 8 தற்கொலைதாரிகளை உருவாக்க குறைந்தபட்சம் 50ஆயிரம் நபர்களை ஸஹ்ரான் தெரிவு செய்துள்ளார். ஸஹ்ரானின் முகாம்கள் நாடு பூராகவும் செயற்பட்டுள்ளன. ஆனால் நாம் குண்டு வெடித்த பின்னர் தான் கவனம் செலுத்தியுள்ளோம். இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மூலமாகவே இது பரவுகின்றது.
இன்று ஆப்கானிஸ்தானில் பெண்கள் கற்றால் கொலைசெய்வார்கள். பாகிஸ்தானில் மலாலா என்ற மாணவிக்கு நடந்தது தெரியும் தானே. அதனையே இன்று இலங்கையிலும் உருவாக்க அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர். ஹிஸ்புல்லாஹ்வை கண்டு பலர் இன்று அஞ்சுகின்றனர்.
ஹிஸ்புல்லாஹ் பணம் சம்பாதிக்க இங்கு பயங்கரவாதத்தை உருவாக்குகின்றாரா என்ற சந்தேகம் உள்ளது. நான்கு பில்லியன் ரூபாவுக்கு அதிகமான பணம் அவருக்கு வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்கிய நிறுவனமே ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பணம் செலுத்தியுள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகள் அனைவருமே ஹிஸ்புல்லாஹ்வுடன் தொடர்பிலிருந்து இந்த பணத்தை கொடுத்துள்ளனர். ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-metro